Holy
Bible in Tamil
அப்போஸ்தலனாகிய
பவுல்
பிலேமோனுக்கு
எழுதின நிருபம்
-
கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய
தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
-
பிரியமுள்ள அப்பியாளுக்கும் எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும்,
உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
-
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்,
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
-
கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும்
உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
-
என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
-
உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின்
அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
-
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால்,
உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
-
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம்
இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
-
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும்,
அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
-
என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக
உம்மை மன்றாடுகிறேன்.
-
முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும்
பிரயோஜனமுள்ளவன்.
-
அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை
நீர் ஏற்றுக்கொள்ளும்.
-
சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப்
பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
-
ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச்
செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
-
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல,
அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப்
பிரிந்துபோனானாக்கும்.
-
எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும்
கர்த்தருக்குள்ளும்
எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!
-
ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை
ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
-
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால்,
அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
-
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச்
செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
-
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்;
கர்த்தருக்குள்
என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
-
நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று
நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.
-
மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று
நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
-
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
-
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும்
உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
-
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் ஆவியுடனேகூட
இருப்பதாக. ஆமென்.